திருமண விழா என்பது ஒவ்வொருவரின் வாழ்வில் நடைபெறும் ஒரு அற்புதமான நிகழ்வு அந்த நிகழ்வை திருவிழாவாக எப்படி கொண்டாடுவது என்ற எண்ண ஓட்டத்தில் உருவாக்கப்பட்டது தான் நமது டி கே எஸ் கேட்டரிங் நிறுவனம். ஒரு சுப நிகழ்ச்சி என்றாலே அதனுடைய மகுடமே சுவையான உணவு தான் அப்படிப்பட்ட அறுசுவையுடன் கூடிய திருநெல்வேலி பாரம்பரிய பக்குவம் மாறாமல் ஒரு விருந்தை கொடுக்க வேண்டும் என்ற முறையில் சிறந்த சமையல் வல்லுநர்களைக் கொண்டு சரியான விகிதாச்சாரத்தில் சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் அனைவருக்கும் பிடிக்கும் அற்புதமான சுவையுடன் உணவை தயார் செய்கிறோம்.
எங்களது நிறுவனம் 26. 6.2010 அன்று எங்கள் குருநாதர் பெருமதிப்பிற்குரிய சத்குரு TK.சுப்பிரமணியம் ஐயா அவர்களின் பொற்கரங்களால் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டது .தொடங்கிய நாள் முதலே தரம், சுவை, சேவை என்பதே எங்களுடைய தாரக மந்திரமாக கொண்டு சிறப்பான சேவையை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு விழாவின் முக்கிய பங்கு வகிப்பது உணவு தான் ,அது காலத்திற்கும் பேசப்படும், தலைமுறைக்கும் பேசப்படும், அவ்வளவு உயர்வான ,சிறப்பான ஒரு நிகழ்வு தான் சுப நிகழ்ச்சியின் விருந்து.
சுப நிகழ்ச்சியில் விருந்து சாப்பாடு முதல் , உணவு பரிமாறும் சேவை, வரவேற்பு செய்து நாதஸ்வரம் மேடை அலங்காரம் மற்றும் ஒரு விழாவிற்கு தேவையான அனைத்து சேவைகளையும் ,தேவைகளையும் செவ்வனே செய்து தருகிறோம். ஒரு நிகழ்ச்சியின் மாப்பிள்ளை அழைப்பில் இருந்து மறு வீட்டு பலகாரங்கள் வரை அனைத்தையும் நாங்கள் உங்களோடு இணைந்திருந்து சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
கடந்த 15 வருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமண வைபவங்களையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுப நிகழ்ச்சிகளையும் செய்திருக்கிறோம். ஒருமுறை எங்களிடம் விருந்தை சுவைத்தவர்கள், அவர்களின் தலைமுறைக்கும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். திருமணம் முடிந்த திருமண தம்பதிகளின் வளைகாப்பு, பெயர் சூட்டு விழா , பிறந்தநாள் விழா , அந்த குழந்தைக்கு பூ புனித நீராட்டு விழா என்று தொடர்ந்து எங்களுடன் சுப உறவை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் பல்லாயிரம் வாடிக்கையாளர்கள்.